Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ மக்களின் விடுதலையை நேசித்த தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் சோலை காலமானார். அவரின் பூதவுடல் சென்னை பெருங்களத்தூர் தொல்காப்பியர் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை புதன் நண்பகல் 12 மணியளவில் இறுதி ஊர்வலம் இடம்பெறும். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த சோலை அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டவர். தோழர் ஜீவாவின் எழுத்துகளால் உந்தப்பட்டவர்.

பின்னர்இ எம்.ஜி.ஆரின் ஆலோசகராக இருந்துஇ அவருக்கானப் பேச்சுகளைத் தயாரித்துக்கொடுப்பதுஇ பிரச்சாரங்களில் துணை செல்வது என செயல்பட்டார். எம்.ஜி.ஆர். மறைவிற்குப்பின் ஜெயலலிதாவின் ஆலோசகரானார். ஜெயலலிதா ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டதை தொடர்ந்து அதிமுகவிலிருந்து விலகியிருந்தார்.

இறுதிவரை ஈழவிடுதலைப் போராட்டத்தை நேசித்த சோலை பல பத்திரிகைகளிலும் அரசியல் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார். ஜனசக்திஇ அண்ணாஇ ஜூனியர்விகடன்இ குமுதம் ரிப்போர்ட்டர் எனப் பலவற்றிலும் எழுதியவர் இறுதிக்காலத்தில் நக்கீரனில் கட்டுரைகள் எழுதி வந்தார். தமிழக அரசியல் பற்றி மட்டுமின்றி இந்திய அரசியல் போக்குஇ உலகளாவிய நிலைமைகள் குறித்து இடதுசாரிப் பார்வையுடன் எழுதிய பத்திரிகையாளர்.. தமிழக அரசின் அம்பேத்கர் விருது பெற்றவர். பத்திரிகையுலகில் 50ஆண்டுகால அனுபவம் பெற்றவர் சோலை அவர்கள்..

0 Responses to தமிழீழ மக்களின் விடுதலையை நேசித்த தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் சோலை காலமானார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com