தி.மு.கழக வக்கீல்கள் அணி ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடந்தது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, சற்குணபாண்டியன், வக்கீல்கள் அணி செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அசன்முகமது அலி ஜின்னா, பொன்முத்துராமலிங்கம், செ.மாதவன், வி.பி.துரை சாமி, ரகுமான்கான், வெங்கடபதி, தாமரைசெல்வன் எம்.பி. உள்பட முன்னணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தி.மு.க. வக்கீல் பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர். மே மாதம் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு தி.மு.க. வினர் மீது போடப்பட்ட வழக்குகள், இதில் போலீசார் நடந்து கொண்ட விதம். வழக்குகளை எதிர் கொண்டது ஆகியவை பற்றி விரிவாக வக்கீல்கள் பேசினார்கள்.
முன்னாள் அமைச்சர்கள் கே.பி.பி.சாமி, பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், தா.மோ.அன்பரசன். கே. என்.நேரு உள்பட கட்சியின் முக்கிய மாவட்டச் செயலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் பற்றி எடுத்து கூறினர். அவற்றை கருணாநிதி அமைதியுடன் கேட்டு கொண்டு தேவையான கருத்துக்களை கூறினார்.
0 Responses to வழக்குகளை சந்திப்பது எப்படி?: கருணாநிதி ஆலோசனை