Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் தாய் மண்ணிலும் உலகெங்கும் அகதிகளாக வாழ்ந்து கொண்டு, தொடர்ச்சியாக தமிழீழத்தில் சித்திரவதைக்கு உட்பட்ட இனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது இத்தோடு நிற்காமல் தமிழர்களின் நிலங்கள் சிங்கள பேரினவாதிகளால், சிங்கள இராணுவத்தால் அபகரிக்கப்பட்டு கொண்டிருகிறது.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் எமது நிலங்களை அபகரிக்கும் நிலை எம்மை வலுவாக தாக்கி, நாளும் எமது கண்ணுக்கு தெரியாமல் சிலாபம், கற்பிட்டியா பகுதியில் இன்று தமிழர்கள், தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்பிரதேசத்தில் அமைந்துள்ள சிறு தீவுகள் தமிழ் பெயருள்ள தீவுகளாக இன்றும் இருக்கின்றன. இன்று இந்த தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள், நிலங்கள் சிறிலங்கா உல்லாசத்துறை அமைச்சினால் மக்களிடமிருந்து சூறையாடப்பட்டு, உல்லாச ஹோட்டல்கள் கட்டப்பட்டு கொண்டிருக்கின்றன.

அங்கு வாழும் மக்கள் யாரின் உதவிகள் இல்லாமல் சில மீனவ மனிதநேய அமைப்புகளுடன் சேர்ந்து போராடி கொண்டிருக்கின்றன. அவர்கள் தாம் வாழும் பிரதேசத்திலேயே அகதிகளாக சிங்கள பேரினவாதிகளால் சித்திரவதைக்குள் ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

தமிழர் வாழும் பிரதேசங்கள் யாவும் சிங்கள காலனித்துவத்திற்குள்ளாகி சிங்கள அரசின், சிங்களமயமாக்கும் திட்டத்திற்குள் அகப்பட்டு கொண்டிருக்கின்றன.

தாயகத்தில் இன்று ஆரம்பித்து இருக்கும் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டங்களுக்கு புலம் பெயர் மக்களும் தாயக போராட்டத்திற்கும் வலுசேர்க்க போராடியாக வேண்டியது இந்த காலத்தின் முக்கிய தேவை.

எதிர்வரும் ஜூன் 26ஆம் திகதி பிரான்சில் புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெறும் வேளை, தமிழர்கள் நாம் எல்லோரும் பிரான்சு பாராளுமன்றம் ஒன்று கூடி இந்த புதிய மாற்றத்துடன் சேர்ந்து தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வையும் வலியுறுத்துவோம்.

பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை.

0 Responses to ஜூன் 26 தமிழர் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம்!- பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை அழைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com