ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் கோர வந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை ஏற்றிவந்த படகு ஒன்று, இந்தோனீசிய கடற்பரப்பில் கவிழ்ந்துவிட்டதாக ஆஸி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தப் படகு இருநூறு பேர் வரையிலான ஆட்களை ஏற்றி வந்ததாக நம்பப்படுகிறது எனவும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு உட்பட்ட கிறிஸ்துமஸ் தீவுக்கு வடக்கே, சுமார் இருநூறு கிலோ மீட்டார் தொலைவில், இந்தப் படகு விபத்தில் தப்பிப் பிழைத்தவர்களை காணக் கூடியதாக இருந்தது என்று ஆஸி நாட்டு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மீட்பு நடவடிக்கையை இந்தோனீசிய அதிகாரிகள் ஒருங்கிணைத்து நடத்தி வருவதாக செய்திகள் கூறுகின்றன.
படகு கவிழ்ந்தப் பகுதிக்கு ஐந்து ஆஸ்திரேலிய கப்பல்களும் சென்று கொண்டிருக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் நோக்கில், இந்த ஆண்டு ஆசிய நாடுகளிலிருந்து செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் இந்தோனீசியவை அதற்கான பாதையாக பயன்படுத்தி, அங்கு சென்று அங்கிருந்து படகு மூலம் ஆஸி பயணமாக முயற்ச்சிகிறார்கள்.



0 Responses to ஆஸி செல்ல முயன்ற அகதிகள் படகு கவிழ்ந்துள்ளது