Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீன காவற்துறையினரால் நேற்று திபெத்தின் லஹாசா நகரில் 600 திபெத்திய பௌத்த துறவிகள் கைது

செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திபெத் மீதான சீன ஆக்கிரமிப்பை கண்டித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 திபெத்திய பௌத்த துறவிகள், லஹாசாவில் தீக்குளித்தனர். இதுவரையில் திபெத்துக்கு வெளியே நடைபெற்று வந்த இந்தவகையிலான தீக்குளிப்பு போராட்டங்கள் தற்போது திபெத்தினுள்ளேயும் 4 வருடங்களின் பின்னர் பரவத்தொடங்கியுள்ளது சீனாவுக்கு தலையிடியாக மாறியுள்ளது.

இதேவேளை திபெத்தின் சுஷுவான் மாகாணத்தின் அரசமாளிகை முன்னாள், 33 வயதான மற்றுமொரு (பெண்) துறவி ஒருவர் நேற்று முன் தினம் புதன்கிழமை தீக்குளித்ததை தொடர்ந்து சீன காவற்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் தங்களது பௌத்த விடுமுறையை கொண்டாடுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் அவர்கள் மீதான ஒடுக்குதல்கள் அதிகரிக்க கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தீக்குளிப்பதை தடை செய்துள்ள சீனா, அவர்க்ளை குற்றவாளிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிப்பதுடன், திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமவே அவர்களை தூண்டிவிடுவதாக குற்றம் சுமத்தி வருகிறது.

0 Responses to 600 திபெத்திய துறவிகள் சீன காவற்துறையால் கைது: பதற்றம் அதிகரிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com