Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் மீதான நிலக்கரி சுரங்க மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் சிபிஐ விசாரணை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அன்னா ஹசாரே குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தான் சிபிஐ இயங்குகிறது. எப்படி பிரதமரை சிபிஐ விசாரணை செய்துவிடும். இது கேலிக்குரியது. இதன் முடிவு எப்படி அமையும் என எமக்கு தெரியும். பிரதமர் ஒரு தவறும் செய்யவில்லை என விசாரணை முடிவுகள் அறிவிக்கும். பிரதமர் தூய்மையானவர் என முத்திரை கொடுக்கும். இது தான் நடக்க போகிறது என ஹசாரே குழுவின் அர்விந்த் கேஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

மூன்று ஓய்வுபெற்ற நேர்மையான நீதிபதிகளை கொண்டு பிரதமர் மீதான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது ஹசாரே குழு. இந்நிலையில் கேஜ்ரிவால் ஏலும் தெரிவிக்கையில், பிரதமர் ஒரு தவறும் செய்யாதவர் எனில் ஏன் பயப்பட வேண்டும். அப்படியாயின் ஏதோ தவறு இருக்கிறது.

முலாயம் சிங் யாதவ், லாலு யாதவ், மாயாவதி என பல்வேறு அரசியல் தலைவர்கள் மீதான சிபிஐ விசாரணை வருடக்கணக்கில் கிடப்பில் கிடக்கிறது.
ஆனால் ஜெகன் மோகன் ரெட்டி, காங்கிரஸை எதிர்ப்பதால், உடனடி கைது வரை நடந்தேறியுள்ளது. சிபிஐ அரசின் கீழ் எப்படி இயங்குகிறதென்பதற்கு இது ஒரு நல்ல சாட்சி. பிரதர் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் சிபிஐ நேர்மையாக விசாரணை நடத்தும் என கோரினால், 14 அமைச்சர்கள் மீதான மோசடி குற்றச்சாட்டுக்கள் மீது நேர்மையாக சிபிஐ விசாரணை நடத்தவில்லை என்பதால் தான், இப்போது பிரதமர் தொடர்பில் சிறப்பு சிபிஐ குழு விசாரணை நடத்தும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய அரசு கடந்த 2006 முதல் 2009ம் ஆண்டு வரை தனியார் நிறுவனங்க்ளுக்கு நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக பாரதிய ஜனதா தலைவர்களான பிரகாஷ் ஜாவேட்கரும், ஹன்ஸ்ராஜ் ஆஹிரும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் புகார் அளித்ததை தொடர்ந்து சிபிஐ இன்று இது தொடர்பில் விசாரணையில் இறங்கியுள்ளது.

0 Responses to பிரதமரை சிபிஐ விசாரித்தால் முடிவு எப்படி இருக்குமென எமக்கு தெரியும் | ஹசாரே குழு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com