தமக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
போரை வழிநடத்திய, போர் தொடர்பான கட்டளைகளை பிறப்பித்த இராணுவத் தளபதி என்ற ரீதியில் எனக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் பற்றி சிறு குழந்தை கூட அறிந்திருக்கும்.
குறித்த காலத்தில் எனக்கு 500 பேர் வரையில் பாதுகாப்பு வழங்கி வந்தனர்.
இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஒன்றிரண்டு ஆண்டுகளில் இல்லாமல் போகாது.
இதேயளவு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்பட்ட ஏனைய சிலருக்கு தொடர்ந்தும் 100, 300 மற்றும் மூவாயிரம் பேர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
எனவே எனது பாதுகாப்பை உறுதி செய்ய பதினைந்து பேரால் முடியாது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.
குறித்த படைவீரர்கள் முழு அளவிலான ஈடுபாட்டுடன் எனக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
பாதுகாப்பு வழங்கும் படையினரின் எண்ணிக்கை குறைவானது என்பது அவர்களுக்கே தெரியும்.
பாதுகாப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதற்கு அஞ்சி ஒளிந்திருக்க போவதில்லை.
விடுதலை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சில விடயங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
அதில் பாதுகாப்பு தொடர்பிலும் குறிப்பிட்டிருந்தேன் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
போதியளவு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என சரத் பொன்சேகா குற்றச்சாட்டு
பதிந்தவர்:
ஈழப்பிரியா
13 June 2012



0 Responses to போதியளவு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என சரத் பொன்சேகா குற்றச்சாட்டு