நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்திற்கு கர்நாடக அரசு சீல் வைக்க உத்தரவிட்டதையடுத்து, கும்பகோணத்தை அடுத்த கஞ்சனூர் பகுதி மக்கள் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அதனை கொண்டாடினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கஞ்சனூர் கோயில் மீட்புக் குழு தலைவர் அண்ணாதுரை, போலி சாமியார் நித்தியானந்தா மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அதாற்காக நாங்கள் கர்நாடக முதல் அமைச்சர் சதானந்தா கவுடாவை பாராட்டுகிறோம்.
எங்க ஊர் சுக்கிரன் கோவிலுக்கு பாவம் செய்து வந்தவர்கள் திருந்திதான் போவார்கள். அதிகாரத்தோடு வந்தவர்கள் நசுங்கித்தான்போவார்கள். அப்படித்தான் பல குற்றங்களில் ஈடுபட்ட, பல வழக்குகளில் ஈடுபட்ட நித்தியானந்தாவை எங்கள் கோயில் பகுதிக்கு வரக் கூடாது என்று தடுத்தோம்.
ஆனால், அவர்களோ எங்கள் மீது பொய் வழக்குப் போட்டு சிறைக்கு அனுப்பினார்கள். அதற்கு இந்த கஞ்சனூர் சுக்கிரனீஸ்வரனே நித்தியானந்தாவுக்கு கர்நாடக அரசு மூலம் தண்டனை கொடுத்திருக்கிறது. இந்த கைது நடவடிக்கையை தமிழக அரசு செய்திருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு செய்திருக்கிறது. எப்படியோ எங்களது கோயிலின் புன்னியம் கெட்டுப்போகாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.
நித்தியின் பிடதி ஆசிரமத்துக்கு சீல்! கஞ்சனூரில் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
பதிந்தவர்:
தம்பியன்
12 June 2012



0 Responses to நித்தியின் பிடதி ஆசிரமத்துக்கு சீல்! கஞ்சனூரில் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!