முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட மன்னிப்பு வழங்கப்பட்டமை அரசியல் சூழ்ச்சியாகும் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்தார்.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவுக்கு பூரண விடுதலை வழங்கப்பட்டு ஹைகோப் வழக்கில் மட்டுப்படுத் தப்பட்ட விடுதலை வழங்கப்பட்டுள்ளமை இதற்குச் சிறந்த உதாரணமாகும்.
சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு அரசியல் நோக்கம் கருதியே வழங்கப்பட்டுள்ளது.பூரண விடுதலை வழங்கப்பட்டால் சரத் பொன்சேகா விடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள அரசியல் உரிமை அவ ருக்குக் மீளக் கிடைக்கும்.
சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமை குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமை சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. இந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமை அரசியல் யாப்பு மற்றும் மனித உரிமை மீறும் செயலாகும் என்றார்.



0 Responses to பொன்சேகா மன்னிப்பு அரசியல் சூழ்ச்சியே