பிரான்ஸ் தமிழ் மக்களின் பெருவிழாவாவாக அமைகின்ற தமிழர் விளையாட்டு விழாவில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையமொன்று அமையவுள்ளது.
தமிழர் விளையாட்டு விழா, 15வது ஆண்டாக வழமையான திறந்தவெளித் திடத்தில் நாளை இடம்பெறுகின்றது. பல்லாயிரக்கணக்கான பிரான்ஸ் வாழ் தமிழர்கள் கலந்து கொள்கின்ற இப்பெருவிழாவில், அமையப்பெறும் மக்கள் தொடர் மையத்தின் ஊடாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசியல் விழிப்பூட்டல் பரப்புரைகளும் இடம்பெற இருக்கின்றது. ஈழத்தில் நடந்தது ஓர் இனப்படுகொலையே என்பதனை பிரென்சு அரசினைக் அங்கீகரிக்க கோரும் கையெழுத்து போராட்டத்திற்கான ஒப்பங்கள் சேகரிக்கப்பட்ட இருப்பதோடு, தமிழீழத் தேசிய அட்டையினை பெற்றுக் கொள்வதற்கான பதிவுகளையும் இந்த மக்கள் தொடர்பு மையத்தில் மேற்கொள்ளமுடியும்.
இந்நிகழ்வில், பிரென்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரபிதாக்கள், மாவட்ட சபை உறுப்பினர்கள் என பிரென்சு சமூக அரசியல் பிரதிநிதிகள் பங்கெடுத்துக் கொள்ளுகின்றனர்.
லுபுர்சே தொடரூந்து தரிப்பிடத்திலிருந்து மைதானத்திற்கு மக்களை அழைத்துச் செல்வதற்கான பேரூந்து ஏற்பாடுகள் காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டுக்களோடு, ஒற்றுமையுணர்வினை ஒருதாய் பிள்ளைகளாய் ஏற்படுத்தும் இந்நிகழ்வில், அனைவரையும் பங்கெடுத்து கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பிரான்ஸ் தமிழர் விளையாட்டு விழாவில் தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையம்!
பதிந்தவர்:
தம்பியன்
30 June 2012
0 Responses to பிரான்ஸ் தமிழர் விளையாட்டு விழாவில் தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு மையம்!