இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு. விழுப்புரத்தில் நடைபெறவுள்ள டெசோ மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்க இருப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழ் ஈழம் ஒன்றுதான் ஈழச் சிக்கலுக்கு தீர்வு என்பதையும், அதற்காக உலகத் தமிழர்களிடையே ஒரு பொதுவாக்கு நடத்த வேண்டும் என்பதையும் டெசோ அமைப்பு வலியுறுத்துகிறது.
அந்த கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்பதினால் டெசோ அமைப்பில் இணைந்து செயல்பட ஒப்புதல் அளித்திருக்கிறோம்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தனி ஈழம் ஒன்றே தீர்வு. டெசோ அமைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் உறுப்பினராக இணைத்துக்கொண்டதற்கு திமுக தலைவர் கலைஞருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெறவுள்ள டெசோ மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என்றார்.
தனி ஈழம் ஒன்றே தீர்வு! டெசோ மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும்!: திருமாவளவன்
பதிந்தவர்:
தம்பியன்
18 June 2012



0 Responses to தனி ஈழம் ஒன்றே தீர்வு! டெசோ மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கும்!: திருமாவளவன்