இலங்கையில் மாவீரர் துயிலகங்கள், தமிழர் வழிபாட்டுத் தலங்கள் ஆகியன படையினரால் அழிக்கப்பட்டு அங்கு சிங்களவர்கள் குடியேற்றம் நடைபெற்று வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வை.கோபாசுவாமி தெரிவித்துள்ளார்.
அரியலூரில் நடைபெற்ற ம.தி.மு.க 19-ம் ஆண்டு விழாவில் அவர் பங்கேற்றிருந்தார்.
அதற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் உரையாற்றிய போதே இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
இந்திய ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் குறித்த இறுதி நிலவரம் தெரிந்த பிறகு யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றி முடிவு செய்யப்படும். ஜனாதிபதி தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு ஒரு வாக்கு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் மாவீரர் துயிலகங்கள், தமிழர் வழிபாட்டு தலங்கள் அழிக்கப்பட்டு அங்கு சிங்களர்கள் குடியேற்றம் நடைபெற்று வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
சிங்கள அரசின் இனப்படுகொலைகள் பற்றி தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதனால் சர்வதேச நீதிமன்றத்தில் அந்த நாட்டு தலைவர் மஹிந்த ராஜபக்சவை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது என்றும் வைகோ குறிப்பிட்டார்.
சுதந்திர தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்த வாக்கெடுப்பில் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் வாக்களிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
ஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதற்கு காரணமாக இருந்தவர் கருணாநிதி. இதை மூடி மறைக்கவே தி.மு.க. இப்போது டெசோ மாநாட்டை நடத்துகிறது.
இலங்கையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்!: வைகோ
பதிந்தவர்:
தம்பியன்
18 June 2012



0 Responses to இலங்கையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்!: வைகோ