இந்தியாவின் அடுத்த ஜனாபதி வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் பிரணாப்முகர்ஜியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
மாநில முதல்வர்களான ஜெ, நவீன் பட்நாயக் போன்றோர் பழங்குடி இனத்தை சார்ந்த சங்மாவை வேட்பாளராக அறிவித்துள்ளது.
சங்மாவுக்கு அவரது கட்சியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரே எதர்ப்பு காட்டி அவரை போட்டியில் இருந்து விலகச்சொல்லியுள்ளார்.
பிரணாப்முகர்ஜிக்கு ஆதரவுகள் பெருகி வரும் நிலையில் தமிழகத்தில் 3 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி காங்கிரஸ் கட்சி வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தந்துள்ளது.
இதுப்பற்றி திருவண்ணாமலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், நாங்கள் பிரணாப்முகர்ஜியை ஆதரிக்கறோம் என அறிவித்தார்.
அவருக்கு ஆதரவு தருவது ஏன் என செய்தியாளர்கள் கேட்டபோது, கொஞ்சம் யோசித்தவர் அவர் ஜெயிக்கும் வேட்பாளர்; அதனால் ஆதரிக்கறோம் என்றார் புன்னகைத்தப்படியே.



Whether Pranab Mukergi is going to win or not,Ramadas should not support him since he aided Srilankan goverment to kill innocent tamils