கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சித்துள்ளதை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் ஒன்றை நடத்தப்போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வருகிற 25 திகதி கோவையில் இப்போராட்டத்தை நடத்தப்போவதாக கூறியுள்ள அவர் இதன் தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில்: பவானி ஆற்றின் குறுக்கே முக்காலி என்ற இடத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 1 டிஎம்சி தண்ணீரை திருப்ப கேரள அரசு முயற்சித்தது. விவசாயிகளின் எதிர்ப்பால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இப்போது 6 டிஎம்சி தண்ணீரை தடுக்க கேரள அரசு நினைக்கிறது. இதனால் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். பவானி நதியின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதினால் குடிநீருக்கும் ஆபத்து வரும். எனவே இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரி 25ம் தேதி கோவையில் அனைத்து கட்சிகளின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தி.மு.க தலைவர் கருணாநிதியும் பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி? : கண்டித்து மனித சங்கிலி போராட்டம்: வைகோ
பதிந்தவர்:
தம்பியன்
20 June 2012



0 Responses to பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி? : கண்டித்து மனித சங்கிலி போராட்டம்: வைகோ