தமிழ் இனவாதத்தின் தந்தையாக சம்பந்தன், அமிர்தலிங்கம் போன்றோரை கருத வேண்டுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தமிழ் இனவாதத்தை அதிகளவில் தூண்டிய கட்சிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும்> தமிழர் விடுதலைக் கூட்டணியையும் குறிப்பிட முடியும்.
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் ஓரளவு நெகிழ்வுத்தன்மையுடன் செயற்படும் என பலரும் கருதினார்கள். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஒன்றுபட்ட நாட்டை குரோதத்தின் மூலம் மீண்டும் பிளவுபடுத்தும் முயற்சிகளில் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.
சம்பந்தனும், அமிர்தலிங்கமும் தான் முள்ளிவய்க்கால பேரவலத்தை ஆரம்பித்தார்கள். இந்த கடும் போக்குடைய அரசியலை தலையில் சுமந்து கொண்ட ஓர் குழந்தையே வேலுப்பிள்ளை பிரபாகரன்.
இரத்தம் தோய்ந்த அரசியலின் தந்தையராக சம்பந்தன் போன்றோரை கருத வேண்டுமென சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



0 Responses to தமிழ் இனவாதத்தின் தந்தை சம்பந்தன்