லண்டன் ஹில்டன் ஹோட்டலுக்கு முன்பாக தமிழ் மக்களுக்கு போட்டியாக சிங்களவர்கள் பெருமளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டு வருவதால், தமிழ் மக்களை அணி அணியாக திரளுமாறு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பிரித்தானிய மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு லண்டன் ஹில்டன் ஹோட்டலில் தங்கி இருக்கும் நிலையில், அந்த ஹோட்டலுக்கு முன்பாக தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்தில் அணி அணியாக பிரித்தானிய வாழ் தமிழ் மக்களை கலந்து கொள்ளுமாறு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் இந்த ஆர்ப்பட்டத்திற்கு போட்டியாக பெருமளவில் சிங்கள மக்கள் தற்சமயம் அணி திரண்டு சிங்கக் கொடிகளுடன் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக நேர் எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி வருவதால் தமிழ் மக்களை உடனடியாக லண்டன் ஹில்டன் ஹோட்டலுக்கு முன்பாக அணிதிரளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
லண்டனில் ஈழத்தமிழர்களுக்கு போட்டியாக சிங்களவர்கள் பெருமளவில் ஆர்ப்பாட்டம் | தமிழர்களுக்கு அவசர அழைப்பு
பதிந்தவர்:
தம்பியன்
04 June 2012
0 Responses to லண்டனில் ஈழத்தமிழர்களுக்கு போட்டியாக சிங்களவர்கள் பெருமளவில் ஆர்ப்பாட்டம் | தமிழர்களுக்கு அவசர அழைப்பு