பிரித்தானிய அரசியாரின் வைர விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற சென்றுள்ள எம்மினத்தின் கோரப்படுகொலைக்கு கட்டளையிட்ட போர்க்குற்றவாளியும், எம்மக்களை அடிமைப்படுத்தி வஞ்சகமாக மண்ணை கையகப்படுத்திக் கொண்டிருப்பவருமான மகிந்த ராஜபக்சவுக்கெதிராக போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.
இதேபோன்று கனடாவிலும் பெருமளவிலான கண்டனப் போராட்டம், கனடிய தமிழர் தேசிய அவையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதனூடாக போர்க்குற்றவாளியை அரசியாரின் நிகழ்வில் அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதோடு ஐரோப்பியத் தமிழர்களின் போராட்டத்திற்கும் ஆதரவு கொடுக்கப்பட்டு வலுச்சேர்க்கப்படவுள்ளது.
எமது ஒருமித்த முழக்கத்தால் எம்மினத்தின் எதிரியை பிரித்தானியாவை விட்டே விரட்டி அடிப்போமென அறைகூவல் விடுக்கின்றோம்.
எதிர்வரும் புதன்கிழமை பிரித்தானி துணைத்தூதரகத்தின் முன்னால் நாம் கூறும் முழக்கங்கள், கேட்கவேண்டியவரின் செவிப்பறைகளைச் சென்று சேரட்டும், செயல்வடிவில் அது நடைமுறையாகட்டும்.
காலை 11 மணிமுதல் மதியம் 3 மணிவரை இக்கவன ஈர்ப்புக் கண்டனப் போராட்டம் நடைபெறுகின்றது. அனைவரும் அணிதிரண்டு வாருங்கள் என கனடியத் தமிழர் அவையால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
0 Responses to கனடிய தமிழர் தேசிய அவை விடுக்கும் அவசர வேண்டுகோள்