Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தென் அமெரிக்க நாடான எக்வடோரில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள நிலையில், அவர் பிணை விதிகளை மீறியுள்ளதாக பிரிட்டன் குற்றம் சுமத்தியுள்ளது.

இதையடுத்து அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 8 மணிவரை பிணையில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் தான் அசாஞ்ச் தங்கியிருக்கவேண்டும். எனினும் நேற்றைய இரவை அவர் லண்டனில் உள்ள எக்வடார் தூதரகத்தில் கழித்துள்ளார்.

ஸ்வீடனில் இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்தார் எனும் குற்றச்சாட்டில் அவரை அந்நாட்டுக்கு நாடுகடத்துவதற்கு அண்மையில் பிரித்தானிய உயர் நீதிமன்றம் சம்மதம் தெரிவித்தது.

இந்நிலையில் அவர் எக்வடோர் நாட்டிலரசியல் தஞ்சம் கோரியுள்ளார். அவர் ஸ்வீடனுக்கு அனுப்பப்பட்டால், அங்கிருந்து அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும் அபாயம் இருப்பதை அடுத்து அவர் இதை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஜூலியன் அசாஞ்ச் மீண்டும் கைது செய்யப்படலாம்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com