Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நித்தியானந்தாவுக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்ததால், அம்மாநில முதல் அமைச்சர் சதானந்த கவுடா, நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டார். ஆசிரமத்தில் நடந்த சட்ட விரோத சம்பவங்கள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் 2 நாட்களில் நித்தியானந்தா கைது செய்யப்படுவார் என்றும் சதானந்தா கவுடா அறிவித்தார்.

இதற்கிடையே, இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் நித்தியானந்தா தரப்பில் வழக்கறிஞர் ரவி.பி.நாயக் 12.06.2012 அன்று மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று (13.06.2012) விசாரித்த நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்துள்ளது.

தனிப்படைகள் அமைத்து தேடப்படுவதால், நித்தியானந்தா எந்த நேரத்திலும் கைது ஆகலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்ட நித்தியானந்தா ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிபதி கோமளா முன்பு சரண் அடைந்தார்.

0 Responses to போலீசாரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com