கடந்த 2009ம் ஆண்டு சிவகங்கை தொகுதியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் சிதம்பரம் வெற்றி பெற்றது குறித்து அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ கண்ணப்பன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.
இதனை தள்ளுபடி செய்ய கோரிய ப. சிதம்பரத்தின் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், முதல் அமைச்சர் ஜெயலலிதா இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
தேர்தலில் முறைகேடு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ப. சிதம்பரம் உடனடியாக பதவி விலக வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், ஜனநாயகத்தை காக்கும் வகையில் பிரதம மந்திரி மன்மோகன் சிங் அவரை மந்திரி சபையில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினார்.



0 Responses to ப. சிதம்பரம் உடனடியாக பதவி விலக வேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்