Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் தற்போது இடி அமீன் ஆட்சி நடைபெற்று வருவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் கடந்த 04.06.2012 அன்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருக்கும் வீரபாண்டி ஆறுமுகத்தை இன்று திமுக பொருளார் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் தற்போது இடி அமீன் ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுகவை ஒடுக்குவதற்காக முக்கிய நிர்வாகிகள் போலி வழக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவற்றை கண்டு திமுக அஞ்சாது. ஜெயலலிதாவினுடைய ஆணவ ஆட்சியைப் பார்த்து கிஞ்சித்தும் கவலைப்படாமல் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்துவிட்டு வந்திருக்கிறோம் என்றார்.

1 Response to தமிழகத்தில் தற்போது இடி அமீன் ஆட்சி நடைப்பெற்று வருகிறது! மு.க.ஸ்டாலின்

  1. Listern maharaja kutty has told this

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com