Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேரை ஜூலை 12-ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மன்னார் மாவட்ட நீதிபதி யூட்சன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா இராமேஸ்வரம் வேர்கோடு கரையத்தெரு என்ற கிராமத்தைச் சேர்ந்த குறித்த 10 மீனவர்களும் சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து நேற்று திங்கட்கிழமை இரவு தலைமன்னார் கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்டனர்.

இதன் போது ஒரு படகு பழுதடைந்த நிலையில் மற்றைய படகில் 10 மீனவர்களும் பயணிக்க முயற்சித்த நிலையில், அப்பகுதியூடாக வந்த இலங்கை கடற்படையினர் இம்மீனவர்களை கைது செய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தலை மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இன்று மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் குறித்த 10 மீனவர்களையும் ஆஜர்படுத்திய போது குறித்த மீனவர்களை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த இந்தி மீனவர்கள் சார்பாக சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை ஜூலை 12 வரை சிறையிலடைக்க உத்தரவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com