போலி வாக்குறுதிகளை வழங்கி இந்தியாவுடன் மஹிந்த அரசாங்கம் விளையாடி வருகின்றது. இந்தியாவின் பிடிக்குள் அரசு வெகுவிரைவில் சிக்கப் போகின்றது என ஐக்கிய சோஷலிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெற்காசியப் பிராந்தியத்தின் வல்லரசான இந்தியாவைத் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என்ற உண்மையை இங்குள்ள ஆட்சியாளர்கள் விரைவில் புரிந்துகொள்வர். இந்தியாவின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
இந்திய அரசை மஹிந்த அரசு பல தடவைகள் ஏமாற்றியுள்ளது. தற்போதும் ஏமாற்றி வருகின்றது. 13 பிளஸ், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஆகிய விடயங்களில் இந்தியாவை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. எனச் சுட்டிக்காட்டியுள்ள சிறிதுங்க,
இந்தியாவைச் சமாளிப்பதற்கு தற்போது வட மாகாணசபைத் தேர்தல் என்ற கதையை இந்த அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. எவரிடம் சொன்னாலும், இல்லாவிட்டாலும் வட மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும். அரசு இதைச் செய்தேயாக வேண்டும். என்றார்.
தூங்கிக்கொண்டிருந்த சிங்கத்துடன் விளையாடப் போய் நரி தனது உயிரைப் பறி கொடுத்த கதை போல்தான், இந்தியா சொல்வதையும், இந்தியா சொல்லாததையும் செய்வோம் என்பது போன்ற போலி வாக்குறுதிகளை இந்தியாவிடம் வழங்கி மஹிந்த அரசு வசமாக மாட்டிக்கொள்ளப் போகின்றது. என அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
0 Responses to இந்தியாவுக்கு போலி வாக்குறுதிகளை வழங்கி வருகிறது