ராயபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர் (39). ஆட்டோ டிரைவரான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித் தார். இதுகுறித்து விசாரணை நடத்த சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் வெளியே வந்த அவர், ’’எனது மனைவி சரள்மேரி. எங்களுக்கு 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகளுக்கு 14 வயது ஆகிறது. 9ம் வகுப்பு படித்து வந்தாள்.
சில வருடங்களுக்கு முன்பு பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்தபோது பக்கத்து வீட்டில் முத்தையா என்பவர் வசித்து வந்தார். கோயிலில் குறி சொல்லும் அவர், பேய்களையும் விரட்டுவார்.
இவருக்கும் எனது மனைவிக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதனால் எனது மனைவியை கண்டித்தேன். அவர் கேட்காததால் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்தில் குடியேறினேன்.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி நள்ளிரவு நான் தூங்கும்போது எனது மனைவி 2 மகள்களை அழைத்துக் கொண்டு முத்தையாவுடன் சென்றுவிட்டார்.
தற்போது, முத்தையாவுக்கு எனது மூத்த மகளை திருமணம் செய்து கொடுக்க மனைவி ஏற்பாடு செய்து வருகிறார். இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி மகளை மீட்டுத் தர வேண்டும். கட்டாய திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வரும் சரள் மேரி மற்றும் முத்தையா மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறினார்.
0 Responses to சாமியாருடன் 14 வயது மகளுக்கு கட்டாய திருமண ஏற்பாடு