Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ரஸ்யாவின் கருங்கடல் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இதுவரை இறந்தவர்கள் தொகை 144 ஐ தொட்டுவிட்டது.

ரஸ்ய அதிபர் விளாடிமிர் புற்றின் அவசரமாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று மக்களை உரிய முறையில் வெளியேற்றுவதில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்த முறைப்பாடுகளை விசாரித்துள்ளார்.

இப்பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக ஓய்வின்றி மழை பொழிந்து கொண்டிருக்கிறது, மேலும் நேற்று முன்தினம் இரண்டு மாதங்களில் பெய்ய வேண்டிய மழை வீழ்ச்சி ஒரு சில மணி நேரங்களில் பொழிந்து தள்ளியது.

இதனால் நதி நீர் மட்டம் இரண்டு மீட்டர்களுக்கு உயர்ந்தது, கடல் வெள்ளமும் கலந்தது, சேற்று படை குடியிருப்புக்களுக்குள் நுழைந்தது, பலருடைய உயிர்களை காவு கொண்டது.

ரஸ்ய அதிபர் புற்றின் சரியான அதிபராக இருந்திருந்தால் இப்பகுதி மக்களை எப்போதோ வேறிடங்களுக்கு நகர்த்தியிருக்க முடியும், ஆனால் கடைசி நேரத்தில் தனது போலி நாடகத்தை ஆரம்பித்துள்ளார்.

வடியாத வெள்ளத்திலும் விடியாத இரவிலும் கிடக்கும் கருங்கடல் பகுதி மக்களுக்கு தம்மை யார் காப்பது என்ற கேள்விக்கு இதுவரை பதில் தெரியவில்லை, இப்படி இருக்கிறது ரஸ்ய வறுமையும், சர்வாதிகார ஆட்சியும்.

இது இவ்விதம் போக மறுபுறம் வட இந்தியாவில் மொன்சூன் காற்று தனது வரலாறு காணாத சதுராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

பெரும் வெள்ளப் பெருக்கால் இதுவரை பலர் மடிந்துள்ளனர் சுமார் ஆறு மில்லியன் மக்கள் தமது விடுகளை விட்டு கட்டாயமாக வெளியேற வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

அசாமில் பிரமபுத்திரா நதி தனது கரைகளை தொடர்ந்து அகலித்தபடி வெள்ளக்காடாக நகரத்திற்குள் பரவிக் கொண்டிருக்கிறது.

மழை மேலும் 24 மணி நேரங்கள் தொடரப்போகிறது, முடிவில் இப்பகுதியை முற்றாக கழுவித்துடைத்துவிடும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆறு மில்லியன் மக்கள் என்பது ஒட்டு மொத்த டென்மார்க்கின் குடித்தொகையை விட ஒரு மில்லியன் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

புவி வெப்பமடைதலை தடுக்கத் தவறிய, ஐ.நாவின் பணிகளுக்கு ஒத்துழைக்க மறுத்த இந்திய, ரஸ்ய தலைவர்களுக்கு இயற்கை வழங்கும் பாடம் எதிர் பார்த்ததைவிட விரைவாக தன் பணிகளை ஆரம்பித்துள்ளது.

அலைகள்

0 Responses to வடியாத வெள்ளம் விடியாத இரவு ரஸ்யாவில் 144 பேர் மரணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com