இன்று காலை யேமனில் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளனர்.
யேமன் தலைநகர் சனாவில், காவற்துறை ஆகடமியை குறிவைத்துஇத்தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, அகடமியில் பயிற்சி முடித்தவர்கள் அங்கிருந்து புறப்பட தயாராகிக் கொண்டிருந்த போது, தற்கொலைதாரி குண்டை வெடிக்க வைத்துள்ளான்.
இஸ்லாமிய கிளர்ச்சிக்குழு இத்தாக்குதலுக்கு பின்னால் செயற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் சானாவில் இராணுவ அணிவகுப்பு ஒத்திகை நிகழ்வின் போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 90 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர்.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் மீது இராணுவம் நடத்தும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலடியாக இவ்வாறான தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொள்ள போவதாக அறிவித்திருந்தனர்.
எனினும் இத்தாக்குதலுக்கு அரேபிய வளைகுடாவில் இயங்கும் அல் கைதாவின் கிளையான அன்சார் அல் ஷரியா பொறுப்பேற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த பெப்ரவரி மாதம் யேமனின் புதிய அதிபராக அப்ரப்பூ மன்சூர் தெர்வானதிலிருந்து இடம்பெற்றுள்ள மிக மோசமான தாக்குதாலக இன்றைய சம்பவம் பதிவாகியுள்ளது.
0 Responses to யேமன் தலைநகர் சனாவில் தற்கொலை குண்டு தாக்குதல்: 20 பேர் பலி