செங்கல்பட்டு மற்றும் பூவிருந்தவல்லி இலங்கை அகதிகள் முகாம்களை மூடவேண்டும் என வலியுறுத்தி செங்கல்பட்டில் இன்று பேரணி செல்ல முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 300 பேர் கைதி செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து பேரணி செல்ல முயன்ற போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மனித உரிமைகள் மோசமாக மீறப்படும் தடுப்பு முகாம்களாக செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்கள் இணங்காணப்பட்டுள்ளன. இங்கு அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் தங்களை திறந்த வெளி முகாம்களுக்கு மாற்றக்கோரி நீண்டநாட்களாக போராடி வருவதுடன், அடிக்கடி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தும் பயனில்லாது அங்கேயே தங்கியிருக்க வேண்டிய இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
0 Responses to நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உட்பட 300 பேர் திடீர் கைது