ஆப்கான் தலைநகர் காபூலில் பெண்கள் திரண்டு அதிபர் ஹர்மீட் கார்சாயின் காதுகளுக்கு கேட்கும்படியாக தமது உரிமைகளுக்காக குரல் கொடுத்தார்கள்.
ஆப்கானில் ஒழுக்கம் கெட்டு நடந்தார் என்ற குற்றச் சாட்டில் 22 வயதுடைய இளம் பெண்மணி ஒருவர் வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சுமார் 150 ஆண்கள் சுற்றவர நின்று கைகளை தட்டி ஆரவாரம் செய்ய, ரைபிள் ஏந்திய நபர் ஒருவர் பெண்மணியை ஐந்து தடவைகள் சுட்டு படுகொலை செய்தார்.
காட்டுமிராண்டிகளே வெட்கப்படும் இந்தத் தீர்ப்பு சட்ட முரணானது என்று பெண்கள் கோஷமிட்டார்கள்.
ஆப்கானில் தலபான்களின் ஆட்சி இருந்த காலத்தில் இதுபோன்ற கேவலமான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவது வழமை ஆனால் மேலைத்தேய ஆட்சி நடக்கும் இடத்திலும் அதுவே அரங்கேறுவது ஏன்.. தலபான்களுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடென அவர்கள் கோஷமெழுப்பினர்.
இது தப்பான குற்றச் செயல், எவருமே சட்டத்தை தன்னுடைய கையில் எடுத்து சகட்டு மேனிக்கு மரண தண்டனை வழங்க முடியாது.
ஆகவே சம்மந்தப்பட்டவர் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நேட்டோ வலியுறுத்தியுள்ளது.
இதுபோல 15 வயது சிறுமி ஒருத்தி குடும்பத்தால் விபச்சாரத்திற்குள் கொண்டு செல்லப்பட்டபோது எதிர்த்து போராடியதால் அவரை மலசல கூடத்திற்குள் பல மாதங்கள் அடைத்து வைத்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.
ஒழுக்கம் கெட்டவள் என்பதால் பெண் வீதியில் சுட்டுக் கொலை (காணொளி இணைப்பு)
பதிந்தவர்:
தம்பியன்
11 July 2012
0 Responses to ஒழுக்கம் கெட்டவள் என்பதால் பெண் வீதியில் சுட்டுக் கொலை (காணொளி இணைப்பு)