அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஐந்தாவது தடவையாக விம்பிள்டன் மகளிர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
லண்டனில் நடந்த இறுதியாட்டத்தில் போலந்தின் அக்னியஸ்கா ரட்வான்ஸ்காவை 6-1, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் செரீனா வீழ்த்தினார்.
தனது டென்னிஸ் வாழ்க்கையில் செரீனா வெல்லும் 14ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
உடல்நிலை பாதிப்பு காரணமாக ஒரு வருடத்துக்கும் அதிகமான காலம் தொழில்முறை டென்னிஸ் போட்டிகளிலிருந்து விலகியிருந்த செரீனா, அதன் பின்னர் வெல்லும் முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
0 Responses to 5வது தடைவையாக விம்பிள்டன் சாம்பியன் ஆனார் செரீனா