தமிழினம் தலை நிமிர்ந்து வாழ
தம்மையே அர்ப்பணித்த தற்கொடையாளர்கள் கரும்புலிகள்
கடலிலும் தரையிலும் பகைவரை அழித்த
காவிய மறவர்கள் கரும்புலிகள்
அன்னை தந்தையை பிரிந்து
அடிமை நிலையை போக்கிய வீரத்திலகங்கள் இவர்கள்
தலைவர் காட்டிய வழியில் பகைவர் பாசறையை
தகர்த்தெறிந்தான் மில்லர் முதற் கரும்புலியாய்
ஆயிரமாயிரம் கரும்புலிகள் அவன் வழியில்
ஆகுதியாக்கினர் தம்முயிரை
ஈழமெனும் பயிர் வளர
இன்னுயிரை ஈந்த வீரர்கள் கரும்புலிகள்
நெஞ்சிலே வெடி சுமந்து சென்று
அஞ்சாமல் வெடித்து விண்ணோடு கலந்தவர்கள்
களிப்பாய் வாழ வேண்டிய வயதில்
கரும்புலிகளாய் வெடித்து கயவரை அழித்தவர்கள்
எவருமே செய்ய முடியாத் தியாகத்தை
எம் தமிழ் ஈழத்திற்காய் நிகழ்த்தி மறைந்தவர்கள்
காலங்கள் மாறினாலும்
கரும்புலிகளின் காவியங்கள் அழியாது
கயவரால் கல்லறைகள் தோண்டப்பட்டாலும்
காற்றோடு கலந்தவர் புகழ் நீங்காது
காவியத் தலைவர் வழியில் வெடித்த
கரும்புலிகள் கனவுகள் நனவாகும் ஓர் நாள்
கண்ணின் மணிகளான கரும்புலிகளை
கரும்புலிகள் நினைவு நாளில் நெஞ்சிற் சுமந்திடுவோம்
தமிழ் ஈழம் மலரும் வரை
தற்கொடையாளர் வழி நின்றிடுவோம்
கரும்புலிகள் நினைவுகளுடன்
க.தமிழவன்
தமிழினம் தலை நிமிர்ந்து வாழ தம்மையே அர்ப்பணித்த தற்கொடையாளர்கள் கரும்புலிகள்
பதிந்தவர்:
தம்பியன்
03 July 2012
0 Responses to தமிழினம் தலை நிமிர்ந்து வாழ தம்மையே அர்ப்பணித்த தற்கொடையாளர்கள் கரும்புலிகள்