இந்தியாவில் சிங்கள் விமானப்படை வீரர்களுக்கு விமானப் பயிற்சி கொடுப்பதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பரபரப்பு சுவரொட்டி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தொடர்ந்து தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் தாக்குதல் நடத்தி கொன்று குவிக்கும் சிங்கள் இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவதாக தொடர்ந்து இந்திய அரசு மீது தமிழின உணர்வாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆனாலும் இந்திய அரசு தமிழின உணர்வாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் இன்னும் தொடர்ந்து சிங்கள இராணுவ வீரர்களுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகளை கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் சிங்கள விமானப்படை வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்படுவதாக வெளியான தகவலையடுத்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் தமிழக அரசியல் கட்சி பிரமுகர்கள் சிங்கள இராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி கொடுக்க கூடாது என்று கண்டனம் தெரிவித்தனர்.
தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கண்டன குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் வாடிமாநகர் கடைவீதியில் தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒரு பரபரப்பு சுவரொட்டி வைக்கப்பட்டுள்ளது.
அதில் மத்திய இந்திய அரசே வெந்த புண்ணில் குத்தாதே.. ஈழத்தமிழர்களை கொன்றும், தமிழக மீனவர்களையும் விரட்டி அடிக்கின்ற சிங்கள இராணுவ காட்டேறிகளுக்கு ஆயுத உதவியா? விமானப் பயிற்சியா..? போர்குற்றவாளி ராஜபக்சவுக்கு சிகப்பு கம்பளமா..? என்று கண்டன குரல் எழுப்பியுள்ள அந்த சுவரொட்டியில் இனியும் தொடருமானால் ஈழ மண்ணையும், எங்களையும் விட்டு விடு என்று முடிகிறது.
இந்த சுவரொட்டியினால் கொத்தமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிங்கள வீரர்களுக்கு விமானப் பயிற்சியா? தமிழின உணர்வாளர்களின் சார்பில் பரபரப்பு சுவரொட்டி
பதிந்தவர்:
தம்பியன்
11 July 2012
0 Responses to சிங்கள வீரர்களுக்கு விமானப் பயிற்சியா? தமிழின உணர்வாளர்களின் சார்பில் பரபரப்பு சுவரொட்டி