வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஏற்கனவே திருமணமான பாடகியொருவருடன் காதல் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹியான் சாங் வோல் என்ற அந்தப் பெண் சமீபத்தில் நடந்த நிகச்சி ஒன்றில் அந்தப் பாடகி, கிம்முக்கு அருகில் அமர்ந்திருந்தார்.
இவர் வட கொரியாவில் பிரபலமான பாடகி இவர். ஒரு பேண்ட் குழுவுடன் இணைந்து கச்சேரிகள் நடத்தி வருபவர்.
கிம்மின் தந்தை கிம் ஜோங் இல் உடல் நலக்குறைவு காரணமாக பதவியிலிருந்து இறங்கியதும், கிம் ஜோங் உன் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டதும் பொது மேடைகளில் பாடுவதை விட்டு விட்டார் ஹியான்.
இந்த நிலையில் தற்போது கிம்முடன் இணைந்து அவர் காணப்படுகிறார்.
இவர்கள் ஏற்கனவே காதலித்து வந்துள்ளனர் அதாவது கிம்மின் தந்தை உயிருடன் இருந்தபோதே நெருக்கமாக இருந்துள்ளனர்.
ஆனால் இந்த உறவை விட்டு விடுமாறு கிம்மிடம் அவரது தந்தை உத்தரவிட்டதால் தனது காதலை தற்காலிகமாக மறந்திருந்தார் கிம்.
அதன் பின்னர் ஹியான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் ஹியானுக்கு ஒரு குழந்தையும் உண்டு.
தற்போது தனது தந்தை இறந்து, தானும் தலைவராகிவிட்டதால், மீண்டும் ஹியானை தன் பக்கம் கிம் இழுத்துக் கொண்டு வந்து விட்டதாக கூறப்படுகிறது.
கிம் ஜோங் உன் மேல் உள்ள பயத்தினால் இந்த காதல் விவகாரம் குறித்து வட கொரிய ஊடகங்கள் அதிகம் செய்தி வெளியிடுவதில்லை.
0 Responses to திருமணமான முன்னாள் காதலியுடன் இணைந்த வடகொரிய ஜனாதிபதி