Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லி ஜந்தமந்தரில் அண்ணா ஹசாரே தமது குழுவினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்து கொண்டார்.

குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பொறுப்பேற்றுக் கொண்ட அதே நாளில், அண்ணா ஹசாரே குழுவினரின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. 4 நாட்களுக்குள் தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், தாமும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும், அந்த உண்ணாவிரதப் போராட்டம் சாகும்வரை நீடிக்கும் என்றும் அண்ணா ஹசாரே கூறியிருந்தார்.

அதன்படி, வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரியும், ஊழல் அமைச்சர்கள் மீது சட்டப்படி நவடிக்கை எடுக்கக் கோரியும் அண்ணா ஹசாரே சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று முதல் தொடக்கியுள்ளார்.

ஹசாரே செய்தியாளர்களிடம் பேசுகையில், "வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றாமல் அரசு இழுத்தடிக்கிறது. ஊழல் செய்த அமைச்சர்களை விசாரிக்க முடியாமல் அதற்கு மத்திய அரசே தடையாக இருக்கிறது. எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை" என்று கூறினார்.

அண்ணா ஹசாரேவின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு, மத்திய அரசுக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்க தொடங்கிவிட்டதாக தெரிகிறது. அன்னா ஹசாரே நேரடியாக உண்ணாவிரதத்தில் குதித்துள்ளதால் போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்கள் கூட்டம் பல ஆயிரங்களாக அதிகரித்துள்ளது.

எனினும் கூட்டம் சேர்வதால் மட்டும் ஒரு பணியை முடித்துவிட்டதாக கருத முடியாது. அதற்கு கடினமாக உழைக்க வேண்டி இருக்கும் என்றார் ஹசாரே.

முன்னர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். கட்சி தொடங்க மாட்டேன். நேர்மையான பின்னணி உள்ளவர்களை நாடுமுழுவதும் தேடிப்பிடித்து அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை தேர்தலில் களமிறக்க போகிறேன் என தெரிவித்திருந்தார்.

இதேவேளை பிரணாப் முகர்ஜி நாட்டின் குடியரசு தலைவர் ஆகியுள்ளதால், அப்பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என அன்னா கூறிய சில கருத்துக்களை அவரது குழுவின் அர்விந்த் கேஜ்ரிவால் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.பிரணாப் ஜனாதிபதி ஆகிவிட்டார் என்பதால் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்க முடியாது என அவர் கூறியிருந்தார்.

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் 14 மத்திய அமைச்சர்கள் மீது அன்னா ஹசாரே குழுவினர் முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய சிறப்புக்குழு அமைக்க வேண்டும், வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்ற விரிவான கோரிக்கைகளை வலியுறுத்தி அன்னா ஹசாரே சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கிறார்.

0 Responses to அண்ணா ஹசாரேவின் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் இன்று தொடங்கியது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com