Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழினவழிப்பு நடவடிக்கைகளில் தொடரந்து ஈடுபடும் சிறிலங்காவின் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதை தடைசெய்ய வேண்டும் என்பது உட்பட ஐந்து அம்சக் கோரிக்கைகளை அனைத்துலக சமூகத்தின் முன்வைத்து, ஒலிம்பிக் போட்டிகளை காணவந்திருக்கும் பன்நாட்டுமக்களின் கவனத்தை ஈரக்கும் வகையில் திரு. சிவந்தன் கோபி அவர்களினால் நடாத்தப்படும் உண்ணாநிலைப் போராட்டம் இன்றுடன் ஒரு வாரத்தை நிறைவு செய்கிறது.

உணவை தவிர்த்து தனித்து நீர் மட்டும் அருந்தியவாறு கடந்த ஏழுநாட்களாக அவர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் மைதானங்களுக்கு அருகாமையில் உள்ள இடமொன்றில் இரவு பகலாக அமர்ந்திருக்கிறார். தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிறு கூடாரம் ஒன்றில் தங்கியிருந்தபடி அவர் தனது போராட்டத்தை தொடர்கிறார்.

காலையில் அவ்விடத்திற்கு வந்திருந்த பர்மிய முஸ்லீம் அமைப்பினைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் சிவந்தனுடன் அளவளாவியதுடன், அவரது போராட்டத்திற்கான தமது ஆதரவினைத் தெரிவித்தனர்.

கடந்த ஒருவாரமாக உண்ணாநிலையில் இருப்பதால் மிகவும் சோர்வடைந்து காணப்படும் அவரது உடல் நிலையை இன்று தமிழ் மருத்துவர்களும், பிரித்தானிய தேசிய மருத்துவ சேவையினரும் பரிசோதித்தனர். திரு. சிவந்தன் அவர்கள் தொடர்ந்தும் தனது போராட்டத்தை முன்னெடுப்பதில் உறுதியாகவிருப்பதாக தம்மை பரிசோதித்த மருத்துவர்களிடம் தெரிவித்தார்.

0 Responses to சிவந்தனின் உண்ணாநிலை போராட்டம் ஒருவாரமாகத் தொடர்கிறது: தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரித்தானியா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com