Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் வடக்குப் பகுதியில் 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் தேர்தல் நடத்தப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சொல்லியிருக்கிறாரே? ஆனால் தேர்தல் நடைமுறைகள் என்று வாக்காளர் பட்டியல்கள் புதுப்பிக்கப்பட வேண்டுமென்றெல்லாம் சொல்லியிருப்பதில் ஏதோ உள்ளார்ந்த அர்த்தம் இருப்பதாகத் தி.மு.க தலைவர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகள் சிலர், கடந்த மாதம் பூசா முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதை எதிர்த்து மற்ற விடுதலைப் புலிகள், பூசா முகாமுக்கு மாற்றப்பட்டவர்களை மீண்டும் வவுனியா சிறைக்கே மாற்ற வேண்டுமென்று கோரி வந்தனர்.

இதை மறுத்த சிறை அதிகாரிகள், மூன்று விடுதலைப் புலிகளை ஒரே அறையில் தள்ளி பூட்டி விட்டனர். இதனால் வவுனியா சிறைச்சாலையில் கடந்த மாதம் 30 ஆம் திகதி பாரிய கலவரம் ஏற்பட்டது.

இதனையடுத்து, வவுனியா சிறையில் இருந்த 201 கைதிகளும், அனுராதபுரத்தில் உள்ள சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் தமிழ்க் கைதிகள் பலர் காயமடைந்துள்ளதோடு, சிறைக்கைதி கணேசன் நிமலரூபன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

ஆனால் அவர் மாரடைப்பால் இறந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிமலரூபன் உடலைப் பெற்றுக் கொண்ட அவரது பெற்றோர், தங்கள் மகன் உடலை வவுனியாவில் தகனம் செய்யப் போவதாக தெரிவித்தனர்.

ஆனால் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் அதற்குக்கூட அனுமதி மறுத்து, நீர்கொழும்புக்கு அருகே உள்ள சுடுகாட்டில் நிமலரூபனின் உடலை தகனம் செய்துவிட்டார்களாம்.

நிமலரூபனின் உடல் முழுக்க இரத்தம் படிந்திருந்ததாகவும், அவருடன் காயம் அடைந்த மற்றொரு கைதி கோமா நிலையில் மருத்துவமனையிலேயே தொடர்ந்தும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்ணின் மைந்தனுக்கு மரணத்தில்கூட மண் உரிமை மறுக்கப்பட்டது, மாபாதகம் அல்லவா? இதற்கெல்லாம் ஓர் விடிவு காண வேண்டும் என்பதற்காகத்தான் “டெசோ” மாநாடு
நடைபெறுகிறது என்று திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி தெரிவித்தார்.

0 Responses to இலங்கையின் வடமாகாணசபைத் தேர்தல் குறித்த மகிந்தவின் கருத்தில் உள்நோக்கம் உள்ளது: கருணாநிதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com