பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவருடைய நிதியமைச்சர் பொறுப்பை பிரதமர் மன்மோகன் சிங் கூடுதலாகக் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நிதியமைச்சர் பொறுப்பு ப. சிதம்பரத்திடம் வழங்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் கவனித்து வந்த உள்துறை அமைச்சர் பொறுப்பு சுசில்குமார் ஷிண்டேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுசில்குமார் ஷிண்டே கவனித்து வந்த மின்துறை பொறுப்பு வீரப்ப மொய்லியிடம் வழங்கப்பட்டுள்ளது.
நிதித்துறை - ப.சிதம்பரம்: உள்துறை - சுசில்குமார் ஷிண்டே: மின்துறை - வீரப்பமொய்லி
பதிந்தவர்:
ஈழப்பிரியா
31 July 2012



0 Responses to நிதித்துறை - ப.சிதம்பரம்: உள்துறை - சுசில்குமார் ஷிண்டே: மின்துறை - வீரப்பமொய்லி