Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்காவில் தமிழ் மக்கள் படும் இன்னல்கள் குறித்து பேசுவதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகக் கருதி தமிழீழ ஆதரவாளர்கள் மாநாட்டில் தாம் கலந்து கொள்ளப்பபோவதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள டெசோ மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தமிழர்களின் பிரச்சினை குறித்து பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் விக்ரமபாகு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை வழங்குவதை தாமதப்படுத்தாமல், அவற்றை துரிதமாக வழங்குமாறு வலியுறுத்தி டெசோ மாநாட்டில், கோரிக்கை விடுக்கப்படும்.

இந்த மாநாட்டில் சிறிலங்க ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை மறந்து போயுள்ளது பற்றியும் பேசப்படும். அத்துடன் நாட்டில் தமிழ் மக்களுக்கு நேரும் அநீதிகளை நிறுத்தவும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துமாறு சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக மக்களை கோரவுள்ளோம்.

சிறிலங்காவில் வாழும் தமிழர்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை இந்த மாநாட்டின் மூலம் பெற்றுக் கொடுக்க முயற்சிப்போம். என்றார்.

தனது தமிழக விஜயத்தின் போது, அந்த மாநிலத்தின் இடதுசாரி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து இந்த கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் விக்ரமபாகு கருணாரட்ன கூறியுள்ளார்.

0 Responses to ஈழத்தமிழர்களின் இன்னல்களை வெளிப்படுத்த வாய்ப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com