வடக்கில் தொடர்ந்து கொண்டிருக்கும் இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பு மற்றும் சிங்கள குடியேற்றம் ஆகியவற்றை எதிர்த்து தமிழ்தேசிய கூட்டமைப்பினர் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டங்களில் இன்று மன்னார் நகரிலும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமும் இடம்பெற்றுள்ளது.
கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மாவட்டச் செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் மன்னார் நகரிலுள்ள சிறுவர் பூங்கா வளாகத்தில் இன்று காலை 10மணிக்கு ஆரம்பமான மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் பிற்பகல் 1மணிவரையில் இடம்பெற்றது. இதன்போது சன்னார் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 500 வரையான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் எதிரான கோசங்களையும் அவர்கள் பதாகை களில் எழுதி போராட்டத்தில் பயன்படுத்தினர். இதில் எங்கள் மக்களை வாழவிடு எங்கள் நிலத்திற்கு எங்களை திரும்பவிடு போன்ற பதாகைளில் இடம்பெற்றிருந்தன. இதேவேளை போராட்டத்திற்கு எதிர்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இதனிடையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராசா சுமந்திர ன் செல்வம் அடைக்கலநாதன் சிவசக்தி ஆனந்தன் வினோ சரவணபவன் விநாயமூர்த்தி போன்றவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் ஆனந்தசங்கரி போன்றவர்களும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தினிடையில் தமிழ்தேசியத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை கலந்து கொண்டிருந்தார். இதன்போது எதிர்வரும் காலத்தில் மக்கள் போராட்டங்கள் பரந்தளவிலும் அழுத்தம் நிறைந்ததாகவும் இடம்பெறும் என குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்
வாழ்வுரிமை மாநாட்டின் பின்னர் தமிழர் தாயப்பகுதிகளிலிருந்து இராணுவம் முற்றாக வெளியேறும் நிலையும் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வாழும் தமது ஆட்சியுரிமையினை நிலைநாட்டும் நிலையும் உருவாக்கப்படும் என முழக்கமி ட்டனர்.
மேலும் வடக்கில் யாழ்ப்பாணம் திருமுறிகண்டி வவுனியா தெல்லிப்பளை போன்ற இடங் களில் கூட்டமைப்பு நடத்தியிருந்த போராட்டங்களின் பொது கலந்துகொள்ளாதளவு அதிகளவு மக்கள் இந்தப்போராட்டத்தின் போது கலந்து கொண்டு தமது உரிமைக் குரலை எழுப்பியிருந்தனர்.
0 Responses to எங்கள் மக்களை வாழவிடு எங்கள் நிலத்திற்கு எங்களை திரும்பவிடு