யாழ்.புகையிரத நிலையத்திற்குள் கடந்த வாரம் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களில் முதலாவது சந்தேகநபரை குறித்த பெண் நேற்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காட்டியுள்ளார்.
புகையிரத நிலையத்திற்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை 36 வயதான பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குறித்த பெண்ணினால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுமையை அடுத்து மூன்று இளைஞர்கள் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
நேற்று சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டவேளை, குறித்த பெண் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞனின் தோளில் தட்டி அடையாளம் காட்டியுள்ளார்.
அதனையடுத்து இந்த பாலியல் வல்லுறவு வழக்கு எதிர்வரும் 13ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் பாடசாலை மாணவன். மற்றையவர்கள் 20, 21 வயதை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னை வல்லுறவுக்கு உட்படுத்திய முதலாவது சந்தேகநபரை அடையாளம் காட்டினார்!
பதிந்தவர்:
தம்பியன்
07 July 2012
0 Responses to தன்னை வல்லுறவுக்கு உட்படுத்திய முதலாவது சந்தேகநபரை அடையாளம் காட்டினார்!