Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடிய பாராளுமன்ற பிரதிநிதிகள், கடந்த மார்ச் மாதத்தில் சிறிலங்கா சென்று அங்குள்ள பல்வேறு சமூகங்களுடனும் குறிப்பாக, தமிழர் சமூகத்துடனும் அவர்களின் பிரிதிநிதிகளுடனும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டு திரும்பினர்.

கனடிய பாதுகாப்பமைச்சரின் பாராளுமன்ற செயலாளாரான ஏஜாக்ஸ் - பிக்கரிங், பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ் அலெஸ்டாண்டர், கனடிய குடிவரவு அமைச்சரின் பாராளுமன்ற செயலாளரான சென்கதரின்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் ரிக் டயஸ்ரா, கனடிய செனட்டரான வேன் வைட் ஆகியோரே இப்பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

தமது பயணத்திற்கு முன்னர், கனடியத் தமிழ் மக்கள் பிரிதிநிதிகளைச் தனித்தனியாக சந்தித்து அனைத்துப் பிரதிநிதிகளும் தங்கள் பிரஜைகளான கனடிய தமிழ் மக்களின் கரிசனைகளை கேட்டறிந்தனர். அக்கரிசனைகள் குறித்து பிரதிநிதிகள் தமது விஐயத்தின் போது அதீத அக்கறை எடுத்து மேலும் அறிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

கனடா திரும்பியதும் முதல் வாரத்திலேயே தமது பயணத்தின் அவதானிப்புகளை அவர்கள் தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். இச்சந்திப்புகளில் சிறிலங்காவில் மனித உரிமைகள், இனங்களுக்கிடையிலான மீளிணக்கம், சமத்துவம் குறித்து பல ஆக்கபூர்வமான கருத்துக்கள் பறிமாறப்பட்டதாக தெரிவித்தனர்.

அத்துடன் ஏப்ரல் 2ஆம் நாள் ஒட்டாவாவில் கனடியப் பாராளுமன்ற முன்றலில் நடைபெற்ற கனடிய அரசிற்கு நன்றி தெரிவிக்கும் முக்கிய மாபெரும் கனடியத்தமிழர் ஒன்றுகூடல் நிகழ்வில், கலந்து கொண்ட 33 கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களில் முக்கிய இருவராக கிறிஸ் அலெஸ்டாண்டாரும், ரிக் டயஸ்ராவும் இணைந்து கலந்து கொண்டு தமது சிறிலங்கா விஐயம் குறித்து மக்களுக்கு எடுத்தியம்பினர்.

இதன் தொடர்ச்சியான சமீபத்தில் கனடிய தமிழர் கன்சவேட்டிவ் செயற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் டூரம் பகுதி இரண்டு தமிழ் அமைப்புக்களான டூரம் தமிழ் அமைப்பு மற்றும் டூரம் தமிழ் கலாசார அமைப்பு ஆகியவையின் முழுமையான ஒத்தாசையுடன் 100 மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ் அலெஸ்டாண்டார், கனடிய தமிழ் மக்களுக்கும், தமிழ் ஊடகங்களுக்கும் தமது பயணத்தின் பெறுபேறு குறித்து ஆழமாக விளக்கியுள்ளார்.

இச்சந்திப்பு ஏஜாக்ஸ் நகரில் அமைந்துள்ள லீஐன் மண்டபத்தில் 90 நிமிடங்களாக நடைபெற்றுள்ளது.

சிறீலங்கா குறித்து கனடிய அரசின் தீர்க்கமான நிலைப்பாடு குறித்தும், இவ்விடயத்தில் கனடிய அரசு மிகுந்த அக்கறையுடன் தொடர்ந்தும் நகர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை விஐயம் குறித்த அறிக்கையும், பரிந்துரைகளும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இவ்விடயம் குறித்து தொடர்ந்தும் பல விடயங்களை திரட்டி வருவதாகவும், முக்கிய சந்திப்புக்களை தொடர்வதாகவும் மேலும் தெரிவித்தார்.

தமிழர் நலனை முன்னிறுத்தி பல்வேறு ஆக்கபூர்வமான செயற்பாடுகள், சந்திப்புக்கள் இவ்விடயத்தில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெறும் செய்திகளுக்காக அவற்றை வெளியிடுவது பொருத்தம் அல்ல எனவும் கனடிய தமிழர் கன்சவேட்டிவ் செயற்பாட்டுக்குழு தெரிவித்தது.

0 Responses to கனடிய பாராளுமன்றப் பிரதிநிதிகள் கனடிய தமிழ் மக்களைச் சந்தித்து சிறிலங்கா விஐயம் குறித்து விளக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com