மத்திய மந்திரி நாராயணசாமி டெல்லியில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
தெற்கு ஆசியா கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் இடையே வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இலங்கை வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இது மிகவும் வருந்தத்தக்கது.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்ககூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை உடனடியாக பரிசீலித்த பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். இதையடுத்து பெங்களூரில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சார்க் ஒப்பந்தப்படிதான் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் பயிற்சி அளிக்காமல் ரத்து செய்வது பற்றி முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு அமைச்சகத்திடம் உள்ளது. இதுபற்றி பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலித்து முடிவு எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
சிங்கள வீரர்கள் வெளியேற்றம் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்யும்: நாராயணசாமி
பதிந்தவர்:
ஈழப்பிரியா
08 July 2012
0 Responses to சிங்கள வீரர்கள் வெளியேற்றம் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்யும்: நாராயணசாமி