முள்ளிவாய்காலில் தமிழீழ மக்களின் விடுதலையை வித்தாக விதைத்துவிட்டு சென்றிருக்கும் எமது மக்களின் தியாகம், தொடர்ந்து அந்த விடுதலைக்காக இன்று சிறையில் வாடும் தமிழ் சிறைக்கைதிகளின் வாழ்க்கை நிலை, அவர்களின் புனர்வாழ்வு பற்றி பிரான்சு அரசிடம் எடுத்து செல்லப்பட்டது.
பிரான்சில் தமிழீழ மக்கள் பேரவையினரால் 3 வருடமாக பிரான்சு பாராளுமன்றம் முன்னாள் நடாத்தப்படும் கவனயீர்ப்பு போராட்டத்திலேயே நிமலருபனின் படுகொலையை கண்டித்து சிறைக் கைதிகளின் வாழ்க்கை நிலை பற்றியும் எடுத்து செல்லப்பட்டது.
இனம் காணப்பட்ட சிறிலங்கா சிறையிலும், இனம்காணப்படாத சிறிலங்கா வதை முகாம்களிலும் தமிழர்கள் ஆண்கள், பெண்கள் என்று பல்லாயிரக்கணக்கானோர் எந்த வித விசாரணையும் இன்றி வாடுகிறார்கள்.
இவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் பல பத்தாண்டுகளுக்கு முன்னால் காணப்படாதவர் படியலில் சேர்க்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இவர்களின் பெற்றோர், மனைவி, குழந்தைகள், இன்றும் இவர்களை தேடியவண்ணம் இருக்கிறார்கள்.
அந்த அடிபடையில் நிமலருபனுடன் வவுனியா சிறையில் தாக்கப்பட்டவர்களில் ஒருவரான டில் ருக்சன் என்பவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் கவலைக்கு இடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று எம்மிடம் இருக்கும் பாரிய செயல்திட்டங்களுக்கு இடையில் தமிழ் சிறைக்கைதிகளின் நிலை மிக முக்கிய இடத்தையும் பெறுகிறது. இவர்களின் நிலையை பல வழிகளிலும் சர்வதேச நாடுகளிடமும், மனித நேய அமைப்புகளின் ஊடாக இவர்களை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றங்கள் முன் இவர்களை அழைத்து வர வேண்டும்.
இவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை சர்வதேச செஞ்சிலுவை அமைப்பும், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமைப்பும் முன்வைக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை நாம் இந்த அமைப்புகளுக்கு அனுப்பி வைத்ததோடு, மட்டுமல்லாமல் பிரான்சு நாட்டு அரச பீடதிற்கும் எடுத்து செல்லப்பட்டுள்ளது.
அத்துடன் இன்று பிரான்சு பாராளுமன்றம் முன் நடந்த ஒன்று கூடலில் பிரான்சு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், தானும் தமிழர்களின் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்துவதாக உறுதியளித்தார்.
இன்று முள்ளிவாய்கால் பின் 3 வருடங்கள் ஆனாலும் நாம் ஒரு முக்கிய கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது போராட்டாம், கவனஈர்ப்புக்கள் அரச கவனத்திற்கு கொண்டு வரவேண்டிய கடமை எம்முடையது.
பிரான்சில் ஜூலை மாத கடைசி வாரம் வரை பிரான்சு பாராளுமன்றம் கூட இருப்பதால், எமது கவனயீர்ப்பு போராட்டம் ஆகஸ்டு மாதம் முதலாம் திகதி வரை எமது போராட்டம் வாரம் தோறும் புதன்கிழமைகளில் தொடரும் என்பதை எல்லோரின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், கறுப்பு ஜூலை இனப்படுகொலை நினைவு கூறல் ஜூலை 23ஆம் திகதி பிரான்சு Trocadero வில் அமைத்துள்ள மனிதவுரிமை சதுக்கத்தில் நடைபெறும் என்பதையும் தெரிவித்து கொண்டு, ஓங்கி ஒலிக்கும் எமது குரல் உலகத்தை எமது பின்னால் அணிவகுக்க செய்யும் என்பதை வலியுறுத்துகிறோம்.
தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.
0 Responses to தமிழர் விடுதலை போராட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகள் நிலை?