கரும்புலிகள் நாளையொட்டி கரும்புலிகள் மென்பந்து சுற்றுபோட்டி சுவீடன், ஸ்ரொக்கொல்ம் நூர்ஸ்பொரி மைதானத்தில் கடந்த 7ஆம் திகதி மிகவும் சிறப்பாகவும் எழுச்சியாகவும் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வு அகவணக்கத்துடன் ஆரம்பித்து, அதனைத் தொடர்ந்து எமது தாயகமண்ணின் தேச விடுதலைக்காக தம்மின்னுயிரை தற்கொடையாக்கிய எம்தேசத்தின் வீரப் புதல்வர்களான கரும்புலிகளை நினைவுகூர்ந்து, அவர்களுக்கான பொதுச்சுடரும் ஏற்றப்பட்டது, தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியும் ஏற்றப்பட்டது.
கரும்புலிகள் கிண்ணம் 8 அணிகள், 8 ஒவர்கள் ,9 போட்டியாளர்கள் கொண்ட சுற்றுபோட்டியாக நடைபெற்றது. இறுதி போட்டியில் சுவிடன் தமிழ் ஜக்கிய விளையாட்டு கழகமும் ஹெல்சிங்பொறி ஈழம் பொய்ஸ் கழகத்துக்கும் நடைபெற்ற போட்டியில் சுவீடன் தமிழ் ஜக்கிய விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று கரும்புலிகள் கிண்ணத்தை கைப்பற்றியது.
உலகம் எங்கும் பரந்து வாழ்ந்தாலும் தலைவரின் சிந்தனைக்கு வடிவம் கொடுக்கும் முகமாக தமிழீழ உறுதியுடன் சுவீடன் தமிழ் இளையோர் அமைப்பு இவ் நிகழ்வை மிக திறமையாக ஒழுங்கு செய்திருந்தது.
சுவீடன் தமிழ் இளையோர் அமைப்பு.
0 Responses to சுவீடனில் கரும்புலிகள் நினைவு கிண்ண மென்பந்து சுற்றுபோட்டி