அதி உன்னத அர்ப்பணிப்பின் 25ஆம் ஆண்டின் நினைவிலும் குட்டிமணி அண்ணா அவர்களின் நினைவையும் தாங்கி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு, பிரித்தானிய தேசிய சுகாதார அமைப்புடன் சேர்ந்து உடல் உறுப்பு தான செயல் திட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளது.
இத்திட்டமானது இன்று திகதி தொடக்கம் எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.
இன்று அதி உன்னத அர்ப்பணிப்பின் உச்ச கட்ட நாள், எமது வீரர்கள் தங்களது உடலையே தாய் நாட்டிற்காக கொடுத்த நாள், எமது இருப்பை உறுதி செய்ய தங்களது இருப்பை இல்லாதொழித்தவர்களின் அற்புத நாள்.
இந்நாளில் தொடங்கும் இந்த செயல் திட்டம் குட்டி மணி அண்ணா இறந்த தினமான ஜூலை 25 நிறைவு பெறும். குட்டி மணி அண்ணா ஏப்ரல் 5, 1981 ஆம் ஆண்டு சிங்கள காவல்துறையால் கைது செய்யப்பட்டார் பின்பு அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பளித்தது.
நீதிமன்றத்தில் அவரது இறுதி விருப்பத்தை கேட்கும் பொது குட்டி மணி அண்ணா, "எனது மரண தண்டனைக்கு முதல் என் கண்ணை எடுத்து கண் தெரியாத ஒரு தமிழனுக்கு கொடுக்கவும். சுததந்திர தமிழீழத்தை காண நான் உயிரோடு இருக்க மாட்டேன் எனது கண்களாவது அதனை காணட்டும்" என்று சொன்னார்.
அதன் பிற்பாடு இலங்கை அரச படைகள் குட்டி மணி அண்ணாவின் கண்களை தோண்டி எடுத்து தங்களது சப்பாத்து காலால் அதனை மிதித்தார்கள். அந்த இரத்த நினைவுகளை சுமந்து நாம் ஒவ்வொருவரும் எமது எதோ ஒரு உடல் உறுப்பினையாவது நாம் இறந்த பின்பு தானம் கொடுக்க முன்வர வேண்டும்.
இவ் செயல் திட்டம் தொடர்சியாக எல்லா லண்டன் நகரங்களிலும் இடம்பெறும். அதேபோல கணிணி மூலமாக பதிவு செய்ய விரும்புபவர்கள் எமது இணையதளமான www.tyouk.org க்கு சென்று உங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு வேண்டகோள் விடுத்துள்ளது.
பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு.
தாய் நாட்டிற்காக உடலை அர்ப்பணித்த வீரர்களின் நினைவாக லண்டனில் உடல் உறுப்பு தான செயற்திட்டம்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
05 July 2012
0 Responses to தாய் நாட்டிற்காக உடலை அர்ப்பணித்த வீரர்களின் நினைவாக லண்டனில் உடல் உறுப்பு தான செயற்திட்டம்