Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்காக இந்திய பிரதமர் தலையிட வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் கலாநிதி மன்மோஹன் சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2ஆம் திகதி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ராமேஷ்வரத்தில் மூன்று மீனவர்களுடன் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த படகொன்றை கற்பிட்டி பிரதேசத்தில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியதுடன் விசாரணைகளுக்காக மீனவர்கள் நீர்கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இராமேஷ்வரத்திலிருந்து கடலுக்கு சென்று கச்சத்தீவை அண்மித்த கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஐந்து மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதை தடுப்பது குறித்து கவனம் செலுத்துமாறு கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி பிரமருக்கு தாம் அனுப்பிவைத்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே இதுகுறித்து இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு அந்த நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஷ்வரம் மீனவர்களை விடுவிப்பதற்கான உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென அவர் அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாக த ஹிந்து மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

0 Responses to தமிழக மீனவர் கைது விடயத்தில் மன்மோஹன் சிங் தலையிட வேண்டும்: தமிழக முதல்வர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com