இந்திய இரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுகரின் சாதனைகளும் ஒரு நாள் முறியடிக்கப்படும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுளார்.
கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சச்சினை புகழ்ந்து பேசிய அவர், எனினும் கிரிக்கெட்டில் மாற்றம் தொடர்ந்து நிகழக்கூடியது. நாங்கள் விளையாடும் போது எதிர்காலத்தில் சுனில் கவாஸ்கர் ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக கருதப்படுவார் என நினைத்தோம். ஆனால் அது தவறாகிவிட்டது. அவரை விட பெரிய கிரிக்கெட் வீரர்கள் தோன்றினார்கள். எந்த ஒரு வீரரையும் விட கிரிக்கெட் மிகப்பெரியது.
சச்சின் கிரிக்கெட்டில் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்கள் மிக பிரமாண்டமானவை. அவருடைய ஒழுக்கமான வாழ்க்கை ஏனைய இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த முன்னுதாரணம். எனினும் சச்சினின் சாதனைகளும் ஒரு நாள் முறியடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் போது இரண்டு இளம் கிரிக்கெட் வீரர்களை பற்றி அதிகமாக எதிர்பார்த்திருந்தேன். ஒருவர் சச்சின் டெண்டுல்கர், மற்றையவர் வினோத் கம்ப்ளி, சச்சின் டெண்டுல்கர் தனது இலக்கை அடைந்துவிட்டார். எனினும் வினோத் கம்ப்ளியால் முடியவில்லை. அவருடைய ஒழுக்கத்தில் குறைபாடு இருந்ததே இதற்கு காரணம் என்றார்.
சச்சின் டெண்டுல்கர் 463 ஒரு நாள் போட்டிகளிலும், 188 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ள நிலையில், வினோத் கம்ப்ளி 17 டெஸ்ட் போட்டிகளிலும், 104 ஒருநாள் போட்டிகளிலும் கலந்து கொண்டனர்.
0 Responses to சச்சினின் சாதனைகளும் முறியடிக்கப்படும்: கபில் தேவ்