திமுக தலைவர் கலைஞர் 09.07.2012 அன்று கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சொத்துகுவிப்பு வழக்கை நீதிபதி மல்லிகார்ஜுனையா விசாரிக்கக்கூடாது என்று ஜெயலலிதா தரப்பில் மனுதாக்கல் செய்துள்ளது பற்றி கூறியுள்ள கலைஞர்,
குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரே நீதிபதியாக இருந்து வழக்குகளை விசாரிக்க வேண்டுமென்று மனுதாக்கல் செய்தாலும் செய்வார்கள். 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்ற செலவு எவ்வளவு ஆகியிருக்கிறது. நீதிமன்றத்தின் நேரம் எவ்வளவு வீணடிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு நீதிமன்றமே தெளிவாக்கினால் பொருத்தமாக இருக்கும். இந்தச் செலவுகளை குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்தே வசூல் செய்வதும் முறையாக இருக்கும்.
சொத்துகுவிப்பு வழக்கின் நீதிமன்ற செலவை ஜெ. உள்ளிட்டோரிடம் வசூல் செய்தால் முறையாக இருக்கும்: கலைஞர்
பதிந்தவர்:
தம்பியன்
09 July 2012
0 Responses to சொத்துகுவிப்பு வழக்கின் நீதிமன்ற செலவை ஜெ. உள்ளிட்டோரிடம் வசூல் செய்தால் முறையாக இருக்கும்: கலைஞர்