Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத் கொலை நாளும் பொழுதும் சூடு பிடித்து வருகிறது.

அரபாத்தை இஸ்ரேல் விஷம் வைத்து கொல்வதற்கு உடந்தையாக இருந்தவர் ஒரு நன்றி கெட்ட பாலஸ்தீன பிரஜையே என்று முன்னாள் பாலஸ்தீன உளவுப்பிரிவு தலைவர் ரவுர்பிக் ரியர்வி தெரிவித்தார்.

அராத் மாளிகையில் பணியாற்றிய இவர் இஸ்ரேலுடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதை தமது உளவுப்பிரிவு கண்டறிந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

2004 நவம்பர் அரபாத் இறந்தபொழுதே அவருடைய மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தில் துப்பறியும் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருந்ததும், அதற்கு ஒருவர் பொறுப்பாக இருந்ததும் இப்போது அம்பலமாகியுள்ளது.

யாசர் அரபாத்தின் உடலைத் தோண்டி எடுத்து, மறுபடியும் பரிசோதனை நடாத்த தயார் என்று பாலஸ்தீன நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனம் தனிநாடாக பிரகடனப்படுத்த உள்ள வேளையில் பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டுவரும் இஸ்ரேலை நெருக்கடிக்குள் மாட்டவும், பாலஸ்தீன பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவும் இந்த துரும்புச் சீட்டு மேசையில் இறக்கப்பட்டுள்ளது.

அரபாத் விஷம் வைத்து கொல்லப்பட்டிருப்பாராக இருந்தால் இஸ்ரேல் பக்கம் அமெரிக்காவைத் தவிர மற்றெந்த நாடும் நிற்கும் என்று கூற இயலாது.

அரபாத்தின் மரணத்தின் மர்மம் உடையும் போது பாலஸ்தீனத்தின் விலங்கும் உடைய வேண்டும் என்ற எதிர் பார்ப்பு பரவலாக இருக்கிறது.

அலைகள்.

0 Responses to அரபாத்திற்கு விஷம் வைத்தது ஒரு பாலஸ்தீனரே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com