Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழீழ உறவுகளே, 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள இனவெறி அரசு ஈழத் தமிழர்கள், எம் மீது நடாத்திக் கொண்டிருக்கும் திட்டமிட்ட இனப்படுகொலை பல்வேறு வழிகளில் உலகமே கண்டிராத உச்சக்கட்ட எல்லையை தாண்டி கங்கணம் கட்டி தொடர்கின்றது .

இவ் வேளையில் தான் தமிழ் இளையோர் அமைப்பு நியூசிலாந்து ஆகிய நாம் ஓர் அவசர வேண்டுகோளோடு உங்கள் முன் வருகின்றோம்.

ஆண்டுகள் எத்தனையோ கடந்தாலும் சிங்கள அரசு எம்மை அழிப்பதில் முழு வீச்சோடு செயல்ப்படுகிறான் .அகிம்சை வழியில் போராடினோம்.

ஆயுத வழியில் போராடி தமிழீழ அரசை அமைத்தோம். ஆனாலும் பிராந்திய நலம் கொண்ட சில வல்லரசு நாடுகளின் உதவியுடன் சிங்கள அரசு எம் மீது போர்விதிமுறைகளை தாண்டிய யுத்தத்தை திணித்தார்கள்.

வீரம் கொண்ட எமது மாபெரும் தமிழீழ காவலர்கள் எவ்வித அடிபணிவும் அல்லாமல் துணிந்து போராடினார்கள். தமிழீழ இலச்சியத்தில் உறுதியோடு களத்தில் உரமாக வீழ்ந்தார்கள்.

எமது போராட்டம் மௌனிக்கப்பட்டது. ஐக்கிய நாட்டின் நிபுணர் குழு அறிக்கையின் பொருட்டு 40 .000 மக்களுக்கும் மேலாக சிங்கள அரசால் கொல்லப்பட்டார்கள்.

146,679 தமிழர்களுக்கு என்ன நடந்தது என்று மன்னார் ஆயர் இன்றும் அதேகோரிக்கையோடு அனைத்துலக நாடுகளை நோக்கி நீதியைக் கேக்கின்றார்.

புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழ்ந்தாலும் எமது குரல் ஓயாமல் ஒலித்துக்கொண்டே தமிழீழ பாதை நோக்கி பறை சாற்றுகின்றது.

சிறிலங்கா அரசை நோக்கி எத்தனை தடவை உலக நாடுகள் தமது கண்டனங்களை தெரிவித்தாலும் ,அரைகுறை தீர்மானங்களை நிறைவேற்றினாலும் சிங்களத்தின் கொடூரம் தொடர்ந்துகொண்டே செல்கின்றது.

தமிழ் மக்களை கொன்றழித்து தற்சமயம் அவர்கள் அப்பன் , ஆச்சி ஆண்ட தமிழீழ பூமியையும் பறிக்கின்றது.

மீண்டும் அகிம்சை வழியில் போராடும் தமிழீழ மக்களை வன்முறை ஊடாக அடக்க நினைக்கின்றது . தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாத செயலாக பொய் உரைத்து தாம் அவர்களை விடுவித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளதாக தம்பட்டம் அடித்து உலக நாடுகளிடம் இருந்து ஆதரவைப் பெற பல பிரயத்தனங்களை எடுக்கின்ற நிலையிலும் தமிழ் மக்களை அடியோடு அழிப்பதில் பல வகையான வியூகங்களை கையாள்கின்றது.

எம் இனிய மக்களே ,எத்தனையோ சாவல்களை கண்டும் தலைநிமிர்ந்து தானைத் தலைவனின் வழியில் வெற்றிகளை கண்ட இனம் நாம் . இப்போது எமது போராட்டம் தாயகத்தில் மௌனிக்கப்பட்ட நிலையில் புலம்பெயர்ந்து வாழும் நாம் எமது விடுதலை நோக்கிய பயணத்தில் என்றும் இல்லாத வேகத்தோடும் வீரத்தோடும் செல்ல வேண்டிய தரணத்தில் நிற்கின்றோம்.

எதிரியவன் தமிழீழ இலச்சியத்தை சிதைப்பதற்கு நிலத்தில் மட்டும் அல்ல புலத்திலும் பல்வேறு வழிகளில் முயல்கின்றான்.

தமிழீழம் என்றோ ஒருநாள் மலரும் என்று தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய எமது மாவீர்கள் மேல் நாம் உறுதி எடுத்து எமது தமிழீழ இலச்சியத்தை அடையும் வரை துரிதமாக உறுதி தளராமல் பயணிப்போம்.

தமிழீழ இலட்சியத்தில் இருந்து விலகி எந்த சக்திகள் எவ்வித தீர்வுகளை திணித்தாலும் அதனையும் உடைத்தெறிந்து பயணிப்போம் என்று இவ் வேளையில் உறுதி எடுத்துக்கொள்வோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

0 Responses to உலகமே எதிர்த்து நின்றாலும் தனித் தமிழீழ இலட்சியத்தில் உறுதியோடு பயணிப்போம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com