Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட உத்தரவிட வேண்டும் என்று, தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை எதிர்வரும் 17ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு கடந்த மாதம், கர்நாடக அரசு கோடையில் அதிக தண்ணீரை செலவு செய்து விட்டு, அணையில் நீர்மட்டத்தை சுட்டிக்காட்டி, காவிரிக்கு தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. இதனால் தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் துன்பப்படுகிறார்கள். எனவே பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்டுமாறு பிரதமருக்கு ஆணையிடவேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டிருக்கிறது..

இந்த மனு பலநாட்கள் வரை விசாரணைக்கு வராததால், இன்று தமிழக அரசின் சார்பான வழக்கறிஞர் வைத்தியநாதன் நீதிபதிகள் டி கே ஜெயின் அடங்கிய அமர்வு முன், ஆஜராகி மனுவைப் பற்றிக் கூறினார். அப்போது நீதிபதி, ஒரு பிரதமருக்கு எப்படி ஆணையத்தைக் கூட்டுங்கள் என ஆணையிட முடியும்? வேண்டுமானால், ஒரு ஆலோசனை வழங்கலாம். எனவே, மனுவை எதிர்வரும் 17ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருப்பதாக டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to தமிழக அரசின் காவிரி நதிநீர் தொடர்பான மனு: 17ம் திகதி விசாரணை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com